Home / Lead News / Post:6692

ரணிலை ஜனாதிபதியாக்குவதற்காகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

Wed, 15 Dec 2021 18:06:37 +0530 | News Desk
ரணிலை ஜனாதிபதியாக்குவதற்காகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

மைத்திரி மீண்டும் ஜனாதிபதியாவதைத் தடுத்து ரணிலை ஜனாதிபதியாக்குவதற்காகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது சர்வதேசத்தின் சதி என்றும் அந்தச் சதி தோல்வியடைந்து கோட்டா வெற்றிபெற்றார் என்றும் அவர் மேலும் கூறினார்.

சிங்கள தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;

ரணிலும் மைத்திரியும் சேர்ந்து ஆட்சி செய்தபோதிலும் ரணிலின் பிழையான நிர்வாகம் காரணமாக ரணிலுடனான உறவை முறித்துக்கொண்டு மஹிந்தவுடன் கைகோர்க்க விரும்பினார்.மஹிந்தவை பிரதமராக்கினார்.

52 நாட்கள் மட்டுமே அந்த ஆட்சி இருந்தது.நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றது.மைத்திரி-மஹிந்த கூட்டணி உருவாவதைத் தடுப்பதற்கும் மைத்திரி மீண்டும் ஜனாதிபதியாவதைத் தடுப்பதற்கும் சர்வதேசம் சதி செய்யத் தொடங்கியது.

ரணிலை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.அதற்காகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடத்தப்பட்டது.ஆனால்,கோட்டா போட்டியிடுவார் என்று அவர்கள் நினைக்கவில்லை.

மைத்திரிதான் போட்டியிடுவார்.உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பலியை மைதிரிமீது போட்டு அவரைத் தோற்கடிக்கலாம்.ரணிலை வெல்ல வைக்கலாம் என்று அந்த சர்வதேச சக்திகள் நினைத்தன.

ஆனால்,நடந்தது வேறு.கோட்டா களமிறங்கினார்.மக்கள் எல்லோரும் அவர் பக்கம் திரும்பினார்கள்.சர்வதேசத்தின் சதி தோற்கடிக்கப்பட்டது.

இப்படித்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.அவர்கள் எதிர்பார்த்ததுபோல் மைதிரிமீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.இதனால்,அதிகம் பாதிக்கப்பட்டது மைத்திரிதான்.என்றார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us