தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் ஒன்றுகூடலில் 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றொரு கோரிக்கை கூட்டாக முன்வைக்கப்பட்டது.
13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வடக்கு-கிழக்கு இணைந்தே இருக்கும்.அப்படியாயின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு-கிழக்கு இணைப்பை ஆதரிக்கிறதா என்று முஸ்லிம்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வடக்கு-கிழக்கு இணைந்தால் கிழக்கில் முஸ்லிம்களின் சனத்தொகை வீதம் வீழ்ச்சியடையும் என்பதால் முஸ்லிம்கள் இணைப்பை எதிர்த்து வருகின்றனர்.
அதேவேளை,வடக்கு-கிழக்கு இணைந்தால் முஸ்லிம்களுக்கு தனி அழகு வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறி வந்தது.
இப்போது இது பற்றி எதுவும் கூறாமல் 13ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முஸ்லிம் காங்கிரஸ் கை உயர்த்தி இருப்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு-இணைப்பை ஆதரிக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.