புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போதைப் பொருள்கள் விற்பனைக்கான பிராந்திய முகவராக செயற்பட்டு வந்தார் என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள தலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான எமது வடக்கு விஜயத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அங்கு அதிக பிரச்சினைகள் உள்ளன என்று மக்கள் எங்களிடம் கூறினார்கள்.
மன்னாரில் சட்டம் நடைமுறை இல்லை.போர் முடிந்தும்கூட சட்டம் அங்கு நடைமுறைப்படுத்ததப்படுவதில்லை.
வடக்கில் மதமாற்றம் இடம்பெறுகிறது.மதமாற்றத்தை நிறுத்தித் தருமாறு மக்கள் கோரினர்.வடக்கில் ஹிந்துக்களுக்கு எதிராக கிறிஸ்தவ அடிப்படைவாதம் உள்ளது.ஹிந்துக்கள்தா இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் 550 இற்கு மேற்பட்ட கிறிஸ்தவ அமைப்புகள் செயற்படுகின்றன.அவர்களின் நோக்கம் எங்களை பிரித்து வைப்பதுதான்.
ஆயுதரீதியாக பிரிவினைவாதத்தை தோற்க்கடித்தாலும் இன்னும் அந்த சிந்தனை நடைமுறையில் உள்ளது.
மன்னாரில் பிள்ளையார் சிலை வைக்க முடியாது.தேரர்களுக்கும் இடமில்லை.
மன்னார்,வவுனியாவில் அதிகமான அரசியல்வாதிகள் கிறிஸ்தவர்கள்.இதனால் ஹிந்துக்களின் பிரச்சினைகளுக்கு பதில் இல்லை.
இதனால் அந்த மக்கள் நினைக்கிறார்கள் அரசுதான் இதையல்லாம் செய்கிறது என்று.
தமிழ் அம்மாக்கள் எங்களிடம் கேட்டது சிறைக் கைதிகளை விடுதலை செய்யுமாறு.
அதைச் செய்ய வேண்டும்.போர் முடிந்துவிட்டது.இவர்களை விடுவித்து புனர்வாழ்வளித்து சமூகத்தில் சேர்க்க வேண்டும்.
ஒரே நாடு ஒரே சட்டம் தேவை என்றே அந்த மக்கள் கூறுகிறார்கள்.இதற்கு என்னைத் தலைவராகப் போட்டது மிகவும் பொருத்தத்தமானது என்றனர்.
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகம்.வடக்கு மக்கள் சொல்கிறார்கள் பிரபாகரன் இருந்திருந்தால் போதைப்பொருள் பாவனை இருக்காது என்று.
அவர்களுக்குத் தெரியாது பிரபாகரன்தான் பிராந்திய போதைப்பொருள் முகவராக செயற்பட்டார் என்பது.ஆனால்,வடக்கில் போதைப்பொருள் பாவனை இருக்கவில்லை.இப்போது அப்படி இல்லை.
வடக்கில் ஒரு நீதி.கிழக்கில் ஒரு நீதி.அதனால்தான் ஒரே சட்டம் அவசியமாகிறது.என்றார்.