இந்த அரசின் மிக மோசமான பொருளாதாரத் திட்டத்தால் நாடு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.இந்த ஆட்சியையும் மோசமான பொருளாதார முறைமையையும் மாற்றுவதற்கு மக்கள் முன்வர வேண்டும் என்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்துக் கூறும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;
ஆழம்,நீளம்,அகலம் தெரியாதவர் ஜனாதிபதி.எது நடந்தாலும் நடக்கட்டும் என்று இருக்கிறார் பிரதமர்.நாடாளுமன்றுக்கு பிரச்சினைகள்பற்றி அறிவிக்கத் தவருகிறார் நிதி அமைச்சர்.
மாலுமி இல்லாத படகுபோல் எம்நாடு இப்போது.சரியான தலைமைத்துவம் இல்லை.
மருந்துத் தட்டுப்பாடு,வாகன உறுதிப்பாகங்களுக்கான தட்டுப்பாடு,அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எல்லாம் ஏற்படும் எதிகாலத்தில்.
இந்த ஆட்சியை மாற்றுவதற்கும் இந்த பொருளாதார முறைமையை இல்லாதொழிப்பதற்கும் மக்கள் முன்வர வேண்டும்.
இந்தப் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டிருப்பது யார்? மக்கள்தான்.ராஜபக்ஸவின் குடும்பமோ அவர்களின் நண்பர்களோ பாதிக்கப்படவில்லை.
எதிர்காலத்தில் எரிபொருள் பிரச்சினை ஏற்படும்.இப்போது செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி,2 மாதங்களுக்கு மட்டுமே எரிபொருள் போதுமானது.அதன்பின் என்ன செய்வது?
நாடு மிக மோசமான கட்டத்தில் உள்ளது.இந்த நிலைமையை மாற்றுவதற்கு மக்கள் முன்வர வேண்டும்.என்றார்.