Home / Lead News / Post:6640

கேஸ் வெடிப்பு:மக்களிடம் அதிக லாபம் பெறுவதற்கான சதி;குற்றவாளிகளை உடன் தண்டியுங்கள்

Tue, 30 Nov 2021 15:34:17 +0530 | News Desk
கேஸ் வெடிப்பு:மக்களிடம் அதிக லாபம் பெறுவதற்கான சதி;குற்றவாளிகளை உடன் தண்டியுங்கள்

பாவனையாளர்களிடம் அதிக லாபத்தைப் பெறுவதற்கான சதியாகவே நாம் இந்த கேஸ் வெடிப்புச் சம்பவங்களை பார்க்கிறோம் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இன்று நாடாளுமன்றில் கூறினார்.

நாட்டில் இடம்பெற்றுவரும் கேஸ் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விசேட உரை ஒன்றை ஆற்றியபோதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்,

நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து வருகின்றன.இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இதில் அரசியல் செய்யாமல் இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு உடனடியாக நாடாளுமன்றத் தெரிவுக்குவொன்றை அமையுங்கள்.

சந்தையில் இருக்கின்ற கேஸின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.தரமற்ற கேஸ் இருந்தால் அதை சந்தையில் இருந்து அகற்ற வேண்டும்.

குற்றப் புலனாய்வு இந்த வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

வெடிப்பை நிறுத்துவதற்குத்தானே இந்த அரசு வந்தது.எங்கும் இனி வெடிக்காது.தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றார்கள்.ஆனால்,இப்போது எங்கும் வெடிக்கிறது.

இந்தப் பிரச்சினையை அப்படியே விடமுடியாது.உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுங்கள் என்றார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us