அரசுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பனிப்போர் நாடாளுமன்றில் வெடித்ததைத் தொடர்ந்து உடனடியாக அரசில் இருந்து வெளியேறுமாறு சு.க உறுப்பினர்கள் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாக அக்கட்சி பட்ஜட் இறுதி வாக்கெடுப்பின் பின் அரசில் இருந்து வெளியேறவுள்ளது என்று சு.க வட்டாரம் தெரிவிக்கிறது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அக்கட்சி தனித்தே போட்டியிடும் என்று தெரிவித்துள்ள சு.க வட்டாரம்,சிறுபான்மை கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளை உள்ளடக்கி கூட்டணி ஒன்றை அமைக்கவும் திரைமறைவில் பேச்சுக்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது.
அதேவேளை,பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களிப்பதா ,இல்லையா என்று சு.கவின் மத்திய குழு கூடித் தீர்மானிக்கவுள்ளது என்றும் அறிய முடிகிறது.
அரசைக் கொண்டு நடத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விரும்பியவர்கள் அரசை விட்டு வெளியேறலாம் என்று கூறினார்.