நாடாளுமன்றில் இடம்பெற்ற மைத்திரி-மஹிந்தானந்த சண்டையின் பின் அரசு சற்று கலவரமடைந்துள்ளது.மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில்.
இப்போது அரசின் முயற்சி என்னவென்றால் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலரை வளைத்துப்போட்டு மூன்றில் இரண்டை உறுதிப்படுத்துவதுதான்.
நாடாளுமன்றில் அந்த சண்டை இடம்பெற்று முடிந்ததும் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவுக்கு பல தொலைபேசி அழைப்புகள்.அவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலரிடம் இருந்து.
அரசுக்கு ஆதரவான உறுப்பினர்கள் அவர்கள்.
''பயப்புட வேண்டாம்.யார் அரசை விட்டுப் போனாலும் நாங்க போகமாட்டோம்''
இவர்கள் சு.க உறுப்பினர்கள் என்றாலும்கூட,அரசுடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்.அரசுக்கு ஆதரவானவர்கள்.
'' ஆம்...நாம் கலரவரம் அடையத்தேவை இல்லை.என்ன நடக்குதுண்டு பார்ப்போம்''
மகிழ்ச்சியோடு பதிலளித்தார் ஜோன்சன்.
இதனைத் தொடர்ந்து 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாடாளுமன்றின் முதலாம் மாடியில் அமைந்துள்ள அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் அலுவலகத்தில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
அது எதிர்க்கட்சி எம்பிக்கள் ஐவருடன்.
அதில் பேசப்படுகின்ற விடயங்கள் மிகவும் இரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அலுவலக ஊழியர்கள்,அதிகாரிகள் மிகவும் சூட்சுமமான முறையில் வெளியேற்றப்பட்டனர்.
அரசின் இக்கட்டான கட்டத்தில் அரசுக்கு ஆதரவு வழங்குவதாக அந்த எம்பிக்கள் தெரிவித்துள்ளனர் என்று அறிய முடிகிறது.
அவர்கள் மாத்திரமன்றி இன்னும் சில எதிர்க்கட்சி எம்பிக்கள் அரசுக்கு ஆதரவு வழங்கவுள்ளார்கள் என்றும் அவர்கள் அங்கு ஜோன்சனிடம் தெரிவித்தனர் என்று அறிய முடிகிறது.
உரிய நேரத்தில் தங்களுக்கு தகவல் வழங்கப்படும் என்று ஜோன்சன் அவர்களுக்கு கூறினாராம்.
இவ்வாறு எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலரையும் சு.க எம்பிக்கள் சிலரையும் வளைத்துப்போட்டு மூன்றில் இரண்டை உறுதிப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது அரசு.