Home / Lead News / Post:6618

மக்கள் மத்தியில் ஞானசாரவுக்கு நல்லெண்ணம் கிடையாது: ஒரே நாடு ஒரே சட்டம் வெற்றியளிக்குமா?

Wed, 24 Nov 2021 21:17:36 +0530 | News Desk
மக்கள் மத்தியில் ஞானசாரவுக்கு நல்லெண்ணம் கிடையாது: ஒரே நாடு ஒரே சட்டம் வெற்றியளிக்குமா?

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு  ஏனைய இனங்களின் மத்தியில் நல்லெண்ணம் கிடையாது.அப்படிப்பட்ட ஒருவரைத் தலைவராக நியமிப்பதன்மூலம் இந்தத் திட்டம் எப்படி வெற்றியளிக்கும் என்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்துக் கூறுகையில்;

புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வா தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.அந்தக் குழுவின் ஊடாகத்தான் ஒரே நாடு ஒரே சட்டம் வர வேண்டும்.

அதுபோக ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பில் நீதி அமைச்சாலும் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில் ஞானசாரவின் தலைமையில் இன்னொரு குழு எதற்கு? ஞானசார தொடர்பில் ஏனைய இனத்தவர்கள் மத்தியில் நல்லெண்ணம் கிடையாது.அவர்தான் பிரச்சினைகளை உருவாக்குகிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இப்படியான ஒரு சட்டத்தை உருவாக்குவதென்றால் அது தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காக அமைக்கப்படும் குழுவின் தலைவர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

அவர் இப்போது மக்களின் கருத்துக்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளார்.எமது கட்சியின் கருத்துக்களையும் அறிவதற்காக எமக்கு அழைப்புவிடுத்தால் போவதா இல்லையா என்று எமது கட்சிதான் முடிவெடுக்கும்.என்றார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us