Home / Lead News / Post:6606

வடக்கு-கிழக்கு இணைப்புதான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு 

Sun, 14 Nov 2021 12:52:01 +0530 | News Desk
வடக்கு-கிழக்கு இணைப்புதான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு 

தமிழ்-முஸ்லிம் மக்களின் கலாசாரம்,வாழ்வு,அடையாளம் போன்றவற்றை அழிப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று விக்னேஸ்வரன் எம்பி தெரிவித்துள்ளார்.

வடக்கு-கிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்கு நன்மையையே பெற்றுக்கொடுக்கும் என்றும் வடக்கு -கிழக்கு இணைப்புதான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அவர் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ்-முஸ்லிம் மக்களின் வாழ்வு,கலாசாரத்துக்கு எதிராக இன்று பாரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அவற்றைப் பாதுகாக்க தமிழ் முஸ்லிம்கள் பழைய கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு ஒன்றுபட வேண்டும்.

இணைந்த வடக்கு-கிழக்கில் அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குவதன்மூலமே எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.ரவூப் ஹக்கீம்கூட வடக்கு-கிழக்கு இணைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்தான்.

அரசில் இணைந்துள்ள சில தமிழ் அரசியல்வாதிகள்போல் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் வடக்கு-கிழக்கு இணைப்பை எதிர்த்து வருகிறார்கள்.

வடக்கு-கிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்கு நன்மையையே பெற்றுக்கொடுக்கும்.வடக்கு -கிழக்கு இணைப்புதான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கும்.என்றார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us