Home / Lead News / Post:6600

ஒரே நாடு ஒரே சட்டம்:30 வருட போருக்கு சமமானது 

Mon, 08 Nov 2021 10:51:26 +0530 | News Desk
ஒரே நாடு ஒரே சட்டம்:30 வருட போருக்கு சமமானது 

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பெயரில் இந்த நாட்டில் உள்ள இனங்களின் தனித்துவமான சட்டங்கள்மீது கை வைப்பது 30 வருட யுத்தம் போன்றதொரு மோசமான நிலைமைக்கே நாட்டை இட்டுச் செல்லும் என்று ஐக்கிய மக்கள் சக்தி எம்பி அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் கருத்துக் கூறுகையில்.. 

இந்த நாட்டில் இருக்கின்ற சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தினாலே போதும்.ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஒன்று தேவையில்லை.

இருக்கின்ற சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.பணக்காரர்களுக்கு ஒரு நீதி.அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி.ஏழைகளுக்கு ஒரு நீதி என அவரவர் தகுதிக்கு ஏற்ப சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதைச் சரியாக நடைமுறைப்படுத்தாமல் அந்ததந்த இனங்களுக்கு இருக்கின்ற தனித்துவமான சட்டங்களில் கைவைத்தால் இந்த நாட்டில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்துக்கு சமமான விடயம் இடம்பெறும்.

இந்தப் புதிய சட்ட ஏற்பாடு தொடர்பில் நாம் எவ்வாறு முகம் கொடுப்பது என்று எமது கட்சிக்குள் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

ஜனாதிபதி அந்தக் குழுவுக்கு நியமித்திருக்கின்ற தலைவரும் சிக்கலானவர்.இனவாதத்தை விதைத்து வருபவர்.அவரை நியமித்தது தொடர்பில் அரச உறுப்பினர்களுக்கே உடன்பாடு கிடையாது.

புதிய அரசியல் அமைப்பையும் இப்படித்தான் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார் ஜனாதிபதி.என்றார்.

 

 

 

 

 

 

 


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us