Home / Lead News / Post:6596

ரணிலை ஜனாதிபதியாக்க நடத்தப்பட்டதா ஏப்ரல் குண்டுத் தாக்குதல்?

Fri, 05 Nov 2021 17:50:27 +0530 | News Desk
ரணிலை ஜனாதிபதியாக்க நடத்தப்பட்டதா ஏப்ரல் குண்டுத் தாக்குதல்?

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கான அரசியல் சூழலை உருவாக்கும் நோக்கில் சர்வதேச சக்திகளினால் நடத்தப்பட்டதுதான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் என்று கூறியுள்ளார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர.

அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனாவையும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு இருந்த கோட்டாபாய ராஜபக்ஸவையும் கொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டது என்று நாமல் குமார அன்றே கூறி இருந்தார் என்றும் தயாசிறி சொன்னார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இதற்குப் பின்னால் சர்வதேச சக்திகள் உள்ளன.

மைத்திரிபால மஹிந்தவை பிரதமராக்கினார்.மைத்திரிபால ஜனாதிபதியாகவும் மஹிந்த பிரதமராகவும் இருந்து ஆட்சி ஒன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை 52 நாட்களில் தோற்கடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே ஏப்ரல் குண்டு வெடிப்பு இடம்பெற்றது.இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது மைத்திரி.அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெரும் நிலையில் அவர் இருந்தார்.இந்தக் குண்டு வெடிப்பால் அந்த வாய்ப்பு இல்லாமல் போனது.

இந்தக் குண்டு வெடிப்பால் அவரது அரசியல் முற்றாகப் பாதிக்கப்பட்டது.சர்வதேச நாடுகளின் தலையீடுகளுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.அதன் பிரதிபலிப்பே இந்தக் குண்டு வெடிப்பு.

அவர் தமது கோரிக்கைகளுக்கு இணங்கமாட்டார் என்று சர்வதேச நாடுகள் உணர்ந்தன.இதனால்தான் குண்டு வெடித்தது.

அப்போது பிரதமராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க.அவரை அடுத்த ஜனாதிபதியாக்கும் சூழலை உருவாக்கும் வகையிலேயே அந்தத் தாக்குதல் அமைந்துள்ளது.

சமய அடிப்படைவாதத்துக்கு அப்பால் வேறு சக்திகள் இந்தத் தாக்குதலின் பின்னணயில் உள்ளன.அவர்கள் யாரென்பதுதான் புதிராக உள்ளது.

இந்தியாவின் அபு ஹிந்த் எங்கே? சாரா எங்கே? சஹ்ரானின் மடிக்கணினியில் இருந்த மதர் போட்டை கழற்றிச் சென்ற அமெரிக்க புலனாய்வு ஏன் அதை எம்மிடம் தர மறுக்கிறது?

இந்தத்த தாக்குதலுக்கு காரணம் சர்வதேச சதிதான்.அது மிகத் தெளிவாகத் தெரிகிறது.இப்படியான சதி எதிர்காலத்திலும் இடம்பெற முடியும்.

இந்தியா,சீனா,அமேரிக்கா போன்ற நாடுகள் இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.என்றார்.

ரணிலை ஜனாதிபதியாக்க நடத்தப்பட்டதா ஏப்ரல் குண்டுத் தாக்குதல்? ரணிலை ஜனாதிபதியாக்க நடத்தப்பட்டதா ஏப்ரல் குண்டுத் தாக்குதல்?
Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us