Home / Lead News / Post:6595

சஜித் தலைமையில் ஆட்சியைப் பிடிக்க தீவிர நடவடிக்கை: கட்சிக்குள் பிளவு இல்லை

Thu, 21 Oct 2021 09:51:04 +0530 | News Desk
சஜித் தலைமையில் ஆட்சியைப் பிடிக்க தீவிர நடவடிக்கை: கட்சிக்குள் பிளவு இல்லை

சஜித்தின் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பி ஹர்ஷ டி சில்வா தெரிய்வத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

சின்ன சின்ன பிரச்சினைகள் எல்லா கட்சிகளுக்குள்ளும் உண்டு.அப்படி எமது கட்சியிலும் உண்டு.அதைத் தீர்த்துவிட்டோம்.அதற்காக யாரும் கட்சியை விட்டுப் போய் அரசில் இணையப்போவதில்லை.அப்படிப் போனாலும் தேர்தலில் வெல்ல முடியாது.

மூழ்கும் கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள்.எமது கட்சி எம்பிக்கள் அரசில் இணையப்போகிறார்கள் என்று அமைச்சர்கள்தான் கூறுகிறார்கள்.அது மக்களை திசை திருப்புவதற்காகக் கூறப்படுவது.அப்படி எதுவும் நடக்கவில்லை.

தேர்தலை நடத்தட்டும் இந்த அரசு.அரசால் மக்களிடம் செல்ல முடியாது.மக்கள் அடித்து விரட்டுவார்கள்.அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது நாமே.அதற்கான ஏற்பாடுகளை நாம் சஜித் தலைமையில் செய்து வருகிறோம்.என்றார்.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us