Home / Lead News / Post:6586

பாதுகாப்பு அமைச்சை எனக்குத் தாருங்கள்: முஸ்லிம் அடிப்படைவாதத்தை ஒழிப்பேன் 

Sun, 10 Oct 2021 08:22:15 +0530 | News Desk
பாதுகாப்பு அமைச்சை எனக்குத் தாருங்கள்: முஸ்லிம் அடிப்படைவாதத்தை ஒழிப்பேன் 

பாதுகாப்பு அமைச்சை ஒரு வருடத்துக்கு என்னிடம் வழங்கினால் முஸ்லிம் அடிப்படைவாதத்தை முற்றாக ஒழிப்பேன் என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழன் பத்திரிகைக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதில் குறிப்பிட்டுள்ள தாவது:

ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத் தண்டனை பெற்றுக் கொடுத்தாலும் பிரச்சினை தீராது.முஸ்லிம் அடிப்படைவாதம் என்பது உலகம் முழுவதற்கும் பிரச்சினையை உண்டு பண்ணுகிறது.

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானோரை கொன்றனர்.உலகம் முழுவதும் இவர்களால் பிரச்சினை.இதன் அடிப்படியில் இலங்கையிலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறுகிறேன்.

ஏப்ரல் தாக்குதலின் சூத்திரதாரி அல்லாஹ்தான் என்று நான் கூறியது அவர்களின் குர்ஆனின் அடிப்படையில்தான்.அனைத்தையும் அறிந்தவன் அவன்தான் என்று அந்த குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டு பிடித்து தண்டிக்குமாறு முஸ்லிம்கள் யாரும் கூறவில்லை.மாறாக தாக்குதலை நியாயப்படுத்தவே செய்தனர்.

நிதி அமைச்சர் அலி சப்ரி மிகப் பெரிய அடிப்படைவாதி.கடந்த அரசில் 6 அல்லது 7 முஸ்லிம் அமைச்சர்கள் செய்ததைஇப்போது அலி சப்ரி செய்கிறார்.

இந்த முஸ்லிம் அடிப்படைவாதத்தை ஒழிக்க வேண்டும்.அதற்காக என்னிடம் பாதுகாப்பது அமைச்சை ஒரு வருடத்துக்கு வழங்கினால் போதும் முற்றாக ஒழித்துக்கட்டுவேன்.என்றார். 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us