Home / Lead News / Post:6579

ஐ.எஸ் இருக்கும்வரை இலங்கைமீதான தாக்குதல் சாத்தியமே!

Wed, 06 Oct 2021 08:04:08 +0530 | News Desk
ஐ.எஸ் இருக்கும்வரை இலங்கைமீதான தாக்குதல் சாத்தியமே!

ஐ.எஸ் இயக்கம் இருக்கும்வரை தனி ஒருவரால்கூட இலங்கைமீது தாக்குதல் நடத்த முடியும் என்று இராஜாங்க அமைச்ச சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;

இலங்கைமீது மற்றுமொரு தாக்குதல் நடத்த முடியும் என்ற ஞானசார தேரரின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.ஐ.எஸ் என்ற இயக்கம் இருக்கும்வரை அது சாத்தியமே.தனி ஒருவரால்கூட தாக்குதல் நடத்த முடியும்.

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் இலங்கை இளைஞர்.தனி ஒருவராகத்தான் தாக்குதல் நடத்தினார்.

அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருந்த நிலையில்தான் தாக்குதல் நடத்தியுள்ளார்.அவர் ஐ எஸ் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர்.

ஐ.எஸ் சிந்தனை மிகவும் ஆபத்தானது.முஸ்லிம்கள் மட்டுமே உலகில் இருக்க வேண்டும்.முஸ்லிம் அல்லாதவர்கள் கொல்லப்பட்டால் சுவர்க்கம் செல்ல முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

வெளிநாடுகளில் படித்தவர்களே இந்தச் சிந்தனைக்குள் ஈர்க்கப்படுகிறார்கள். அப்படியென்றால், சாதாரண மக்கள் ஈர்க்கப்படுவது மிகவும் இலகு.

எமது புலனாய்வு பலப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் உதவி செய்ய வேண்டும்.

தான் அமைச்சராக இருக்கும்வரை இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துக்கொண்டே இருப்பேன்.என்றார்.

 

 

 

 

 

 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us