Home / Lead News / Post:6577

முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் இனவாதம்: ஏப்ரல் தாக்குதல் நடத்தியது ஆட்சியைப் பிடிக்கவா?

Tue, 05 Oct 2021 12:10:44 +0530 | News Desk
முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் இனவாதம்: ஏப்ரல் தாக்குதல் நடத்தியது ஆட்சியைப் பிடிக்கவா?

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியானதும் ஓய்ந்து போயிருந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மீண்டும்  தலைதூக்கியுள்ளது என்று ஜேவிபி தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்;

சில பௌத்த தேரர்களின் செயற்பாடுகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.பௌத்த மதத்தை சர்வதேச மட்டத்தில் தரம் குறைப்பதற்கான சர்வேதேச சதிக்கு இவர்கள் துணைபோகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏப்ரல் தாக்குதலுக்கு முன் ஆண்மையை இல்லாதொழிக்கும் கொத்து ரொட்டி,ஆண்மையை இல்லாதொழிக்கும் வைத்தியர்கள் பற்றி பேசப்பட்டது.கோட்டா ஜனாதிபதியானதும் அவற்றைக் காணவில்லை.

இப்பொது மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் கிளப்பப்படுகிறது.அரசுக்கு எதிராக எல்லா தரப்பிலும் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதால் அவற்றை மூடி மறைப்பதற்காக இந்த இனவாதம் கிளப்பப்படுகிறது.

ஏப்ரல் தாக்குதல் நடத்தப்பட்டது ஆட்சியைப் பிடிக்கத்தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டுப் போராடும் பேராயருக்கு எதிராக இன்று அரச தரப்பினர் தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்த அரசு மீண்டும் இரத்தம் சிந்தும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு செல்வதற்கு சதி செய்கிறதா என்ற சந்தேகம் எமக்கு உண்டு.என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us