Home / Crime Story / Post:6576

போதைக்கு பணம் வழங்க மறுத்த கர்ப்பிணி மனைவி: சுடுதண்ணீர் ஊற்றி கணவன் தாக்குதல் 

Wed, 29 Sep 2021 08:58:48 +0530 | News Desk
போதைக்கு பணம் வழங்க மறுத்த கர்ப்பிணி மனைவி: சுடுதண்ணீர் ஊற்றி கணவன் தாக்குதல் 

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான கணவனுக்கு மனைவி பணம் தர மறுத்ததால் அவர்மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ளார் அவரது கணவன்.

கர்ப்பிணியான அப்பெண்மீது சுடுதண்ணீர் ஊற்றி தாக்குதல் நடத்தியதால் கண் பாதிக்கப்பட்டு அப்பெண் கொழும்பு கண் சிகிச்சை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணவனுக்கு 23 வயது என்றும் மனைவிக்கு 20 வயது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


Popular News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us