Home / Lead News / Post:6572

பொருட்களின் விலையேற்றம்: இன்று இறுதி முடிவு...பால் மா-ரூ.200 கோதுமை மா-ரூ.10 எரிவாய்வு-ரூ.550 சீமெந்து-ரூ.50

Mon, 27 Sep 2021 08:26:38 +0530 | News Desk
பொருட்களின் விலையேற்றம்: இன்று இறுதி முடிவு...பால் மா-ரூ.200 கோதுமை மா-ரூ.10 எரிவாய்வு-ரூ.550 சீமெந்து-ரூ.50

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.

வாழ்க்கைச் செலவீனம் தொடர்பான அமைச்சரவை உப குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் வெள்ளிக்கிழமை கூடி இதுபற்றி ஆராய்ந்து.

அப்போது கீழ்வரும் பொருட்களுக்கான விலையேற்றம் முன்மொழியப்பட்டது.

பால் மா-ரூ.200,கோதுமை மா-ரூ.10,எரிவாய்வு-ரூ.550,சீமெந்து-ரூ.50.

இப்பொருட்களின் விலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதால் சந்தையில் இவற்றின் தட்டுப்பாடு நிலவுவதை அதிவதானிக்க முடிகிறது.

சீமெந்துபோன்ற பொருட்கள் இடத்துக்கு இடம் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுகின்றன.கூடுதலான பொருட்களை கொள்வனவு செய்தால் மாத்திரமே பால் மா வழங்கப்படுகிறது.சில இடங்களில் பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் இவற்றின் விலையை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை இன்று இறுதி முடிவை எடுக்கவுள்ளது.

 

 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us