600இற்கு மேற்பட்ட பொருட்களுக்கு அரசு இறக்குமதிக் கட்டுப்பாட்டை விதித்தமைக்கான காரணம் எரிபொருள் மற்றும் சீனி இறக்குமதிக்காக டொலரை மிச்சப்படுத்துவதற்காகவே என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதோடு அதற்கான தட்டுப்பாடும் நிலவுகிறது.
இந்த நிலை தொடர்ந்தால் சீனி மற்றும் எரிபொருள் உள்ளிட்ட மிக முக்கியமான பொருட்களின் இறக்குமதி தடைப்படும் என்று அஞ்சியே மேற்படி முடிவை அரசு எடுத்துள்ளது.
இந்த முடிவின் ஊடாக அந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காகச் செலவிடும் டொலர்களை அரசு சீனி மற்றும் எரிபொருள் இறக்குமதிக்காகப் பயன்படுத்தும் என்று அறிய முடிகிறது.
இதன் காரணமாக இறக்குமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள் தாறுமாறாக அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.