Home / Local News / Post:6561

அதிகரிக்கும் சிறுவர் கொரோனா தொற்றாளர்கள்:பெற்றோர்களே கவனம்!

Tue, 17 Aug 2021 07:58:46 +0530 | News Desk
அதிகரிக்கும் சிறுவர் கொரோனா தொற்றாளர்கள்:பெற்றோர்களே கவனம்!

பொரல்லை ரிஜ்வெ சிறுவர் வைத்தியசாலையில் கொரோனவுக்காக சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது 150 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் 20 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அங்கு அனுமதிக்கப்பட்டு  வருகின்றனர் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ராஜகிரியவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலையின் இரண்டு கட்டடங்கள் ஒதுக்கப்பட்டு சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஆனால்,அங்கும் இப்போது இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.ஆகவே,சிறுவர்கள் விடயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us