Home / Lead News / Post:6560

புதிய அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரும்?

Fri, 13 Aug 2021 07:50:08 +0530 | News Desk
புதிய அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரும்?

அமைச்சரவை மாற்றம் ஒன்று இடம்பெறவுள்ளது.அதில் முஸ்லிம் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சு ஒன்று வழங்கப்படவுள்ளது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அந்தத் தகவல்கள்  மேலும் தெரிவிக்கின்றன.

மேலும், புதிய அமைச்சரவையில்,பவித்ராவிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டு அவருக்கு மின்சக்தி அமைச்சு வழங்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சராக ரமேஷ் பதிரன நியமிக்கப்படவுள்ளார்.

கெஹலியவிடம் இருந்து ஊடக அமைச்சு பறிக்கப்பட்டு அவருக்கு பெருந்தோட்டத்துறை வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு மேலும் பலரின் அமைச்சுக்களில் கைவைக்கப்படவுள்ளது என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us