Home / Lead News / Post:6558

70 உடல்கள் வெளியே.!!! பெரும் நெருக்கடியில் வைத்தியசாலை

Tue, 10 Aug 2021 07:07:27 +0530 | News Desk
70 உடல்கள் வெளியே.!!! பெரும் நெருக்கடியில் வைத்தியசாலை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 70 இறந்த உடல்கள் பிரேத அறைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன.

உடல்களை விரைவாக தகனம் செய்வதற்கும் அடக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்காமை இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

இவற்றில் அதிகமான உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.பொரளை கனத்தைக்கும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பு இல்லாமை இந்த உடல்கள் வைத்திருப்பதற்கு காரணம் என்று அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

இந்த வைத்தியசாலையின் 6 குளிரூட்டிகள் பழுதடைந்து 2 மாதங்களாக திருத்தப்படாமல் இருந்தமை இவ்வாறு உடல்கள் குரூட்டிகளுக்கு வெளிய வைக்க மற்றொரு காரணம் என்று அவர் கூறினார்.

 சில வாரங்களுக்கு முன்பே அவை நிறுத்தப்பட்டன என்றும் அவர் சொன்னார்.

இருந்தாலும்,இந்த உடல்களை விரைவாக அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதன்மூலம் இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று சமன் ரதனப்பிரிய தெரிவித்தார். 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us