Home / Lead News / Post:6557

றிசாத் விவகாரம்: சஜித்தின் நிலைப்பாடு என்ன?

Wed, 28 Jul 2021 07:39:19 +0530 | News Desk
றிசாத் விவகாரம்: சஜித்தின் நிலைப்பாடு என்ன?

றிசாத் பதியுதீனின் வீட்டில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மௌனம் காத்து வருகிறது.எதிர்ப்பையோ அல்லது ஆதரவையோ வெளிக்காட்டவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமைப்பில் றிசாத் பதியுதீனின் கட்சியும் ஒன்று என்பதால் மேற்படி விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸா அவரது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

சஜித் அணியின் இன்னொரு அணியான மனோ கணேசனின் கூட்டமைப்பு இப்போது ரிஷாதுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளது.தனது கூட்டணிக்குள்ளேயே இப்படியொரு நிலை ஏற்பட்டிருப்பதால் இது தொடர்பிலும் சஜித்தின் நிலைப்பாட்டை அறிய விரும்புகின்றனர் மக்கள்.

 

 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us