அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.இதுமீதான வாக்கெடுப்பு நாளை இடம்பெறும்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளது.
40 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டு பிரேணையை சபாநாயகரிடம் கையளித்தனர்.சபாநாயகரின் தீர்மானத்துக்கு அமைய இன்று அதுமீதான விவாதம் இடப்பெறுவதோடு வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது.
இந்தப் பிரேரணையத் தோற்கடிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
அரசுக்குள் பிரச்சினைகள் இருந்தாலும் இந்தப் பிரேரணையை நாம் ஒன்றிணைத்து நின்று தோற்கடிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அங்கு உறுப்பினர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.