Home / Lead News / Post:6554

ஐரோப்பிய ஒன்றியம் பார்த்த வேலையால் இலங்கை மீதான பிடியை மேலும் இறுக்கும் சீனா

Sat, 17 Jul 2021 19:47:41 +0530 | News Desk
ஐரோப்பிய ஒன்றியம் பார்த்த வேலையால் இலங்கை மீதான பிடியை மேலும் இறுக்கும் சீனா

இலங்கைக்கு உதவுதல் என்ற போர்வையில் கடன்களையும் பல சலுகைகளையும் வழங்கி இலங்கையின் வளங்களை சுரண்டி வரும் சீனா இன்னொரு சலுகை ஊடாக இலங்கையை மேலும் கட்டுப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிராக எடுத்துள்ள நிலைப்பாடே சீனாவுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமைகள் மீறல்களை காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வரும் GSP + வரிச் சலுகையை நீக்குவது என்று தீர்மானித்துள்ளது.அவ்வாறு செய்தால் இலங்கையின் கடல் உற்பத்திகளை இறக்குமதி செய்து இலங்கைக்கு உதவுவதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

இது இலங்கைக்கு உதவுவதுபோல் தெரிந்தாலும் இதன்மூலம் சீனா மேலும் இலங்கையை கட்டுப்படுத்தும் என்றும் இதைக் காட்டியே மேலும் பல வளங்களை சீனா இலங்கையில் இருந்து சுரண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இலங்கைக்கு கடன் வழங்கி அதை இலங்கையால் செலுத்த முடியாமல் போனதும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்குப் பெற்றுக்கொண்டது.

அதுபோல் இன்னும் பல விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. 

 

 

 

 

 


 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us