Home / Sub Lead News / Post:6550

யாலவில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் விற்பனை

Fri, 16 Jul 2021 09:47:27 +0530 | News Desk
யாலவில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் விற்பனை

யாலவில் 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வெளி ஆட்களுக்கு விற்பனை செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை அரசு உடன் கைவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விதித்துள்ளார்.

இல்லாவிட்டால் இதற்கு எதிராக நாம் மக்களுடன் வீதிக்கு இறங்கிப் போராடுவோம் என்று கூறினார்.

சுற்றுலா துறை சாரதிகள் சங்கத்துடன் அவர் அவரது அலுவலகத்தில் வைத்து நடத்திய சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.

''யால என்பது சர்வதேச சுற்றுலாவாசிகளை கவர்ந்த ஓர் இடம்.இலங்கையின் மிக முக்கியமான வளங்களில் ஒன்று.இதில் கை வைத்தால் அங்குள்ள விலங்குகள் அழிவதோடு ஏனைய வளங்களும் அழியும்.ஆகவே,அரசு இந்தத் திட்டத்தை உடன் கைவிட வேண்டும் ''-என்று அங்கு அவர் மேலும் கூறினார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us