Home / Sub Lead News / Post:6549

எங்களிடம் கேட்காமல் செய்யக்கூடாது 

Fri, 09 Jul 2021 08:48:09 +0530 | News Desk
எங்களிடம் கேட்காமல் செய்யக்கூடாது 

முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை திருத்துதல் உள்ளிட்ட முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களை செய்யும்போது முஸ்லிம் எம்பிக்களின் ஆலோசனைகள் கட்டாயம் பெறப்பட வேண்டும் என்று எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

அவர் அங்கு மேலு கூறுகையில்,

முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை திருத்துவது தொடர்பில் நாம் நீதி அமைச்சரை சந்தித்து பேசினோம்.முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளான எமது விருப்பத்துக்கு மாறாக அரசு எதையும் செய்யக்கூடாது.எமது ஆலோசனைகளை பெற்று அதற்கு அமையவே செயற்பட வேண்டும்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறுபான்மை இன மக்களின் அடிப்படை உரிமைகளையும் மத சுதந்திரத்தையும் மீறி வருகின்றமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனால் இலங்கைக்கு ஜீ எஸ் பி பிளஸ் வரிச் சலுகை இல்லாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.என்று கூறினார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us