Home / Lead News / Post:6546

றிசாத் பதியுதீன் வீட்டுக்காவலில்: அனுமதி கோருகிறது அவரது தரப்பு 

Fri, 09 Jul 2021 08:02:01 +0530 | News Desk
றிசாத் பதியுதீன் வீட்டுக்காவலில்: அனுமதி கோருகிறது அவரது தரப்பு 

றிசாத் பதியுதீனை சிஐடியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து வீட்டுக்காவலில் வைப்பதற்கு றிசாத் பதியுதீனின் சட்டத்தரணிகள் நேற்று உயர் நீதிமன்றில் அனுமதி கோரினர்.

இது தொடர்பான சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை 15 ஆம் திகதி முன்வைப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ரிஷாதுக்கு எதிராக பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கள் எதுவும் முன்வைக்காததால் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் 11/1 இன் பிரிவின் கீழ் அவருக்கு நீதிமன்றம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள் அங்கு மேலும் கூறினர்.

அவரை வீட்டுக்காவலில் வைக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாட்டுடனான விசாரணைகளைத் தொடரவோ முடியும் என்று றிஸாத்தின் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் கூறினார்.

றிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்து அதுக்கு எதிராக 500 கோடி ரூபா நட்டஈடு பெற்றுத் தர வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் உயர் நீதிமன்றில் இடம்பெற்றது.

அப்போதே றிஸாத்தின் சட்டத்தரணிகள் மேற்படி கோரிக்கைகளை முன்வைத்தனர்.இந்த வழக்கு இந்த மாதம் 15 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us