Home / Lead News / Post:6545

முஸ்லிம் கட்சிகள் அரசுக்குள்...தொடர் பேச்சுக்களில் பசில்... ஜனாதிபதியாவதற்கான முன்னேற்பாடு 

Thu, 08 Jul 2021 07:43:06 +0530 | News Desk
முஸ்லிம் கட்சிகள் அரசுக்குள்...தொடர் பேச்சுக்களில் பசில்... ஜனாதிபதியாவதற்கான முன்னேற்பாடு 

பசில் ராஜபக்ஸ எம்பி ஆவதை அரசுக்குள் உள்ள கூட்டணி கட்சிகள் பல விரும்பவில்லை.இதனால் சில கட்சிகள் அரசில் இருந்து விலகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதைச் சரி செய்வதற்காக எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் அரசுடன் இணைப்பதற்கான நடவடிக்கையில் பசில் ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளார் என்று அறிய முடிகிறது.

அரசின் செல்வாக்கு இப்போது சிங்கள மக்கள் மத்தியில் சரிந்துகொண்டு போவதால் அதைச் சரி செய்வதற்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு அரசுக்குத் தேவைப்படுகிறது.

இப்போதே முஸ்லிம் கட்சிகளை அரசுடன் இணைத்துவிட்டால்தான் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது வெற்றி பெற முடியும் என்று கருதுகிறாராம் பசில்.

இதனால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதை அறிய முடிகிறது.

பசில் எம்பியானதைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்றும் அப்போது முஸ்லிம் எம்பிக்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்றும் அறிய முடிகிறது.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us