Home / Lead News / Post:6541

பசில் நாடாளுமன்றம் நுழைவதை எதிர்க்கிறாரா ஜனாதிபதி?

Sat, 03 Jul 2021 08:14:19 +0530 | News Desk
பசில் நாடாளுமன்றம் நுழைவதை எதிர்க்கிறாரா ஜனாதிபதி?

பசில் ராஜபக்ஸ மீண்டும் நாடாளுமன்றம் நுழைவதை நானும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் எதிர்ப்பதாக சில ஊடகங்களும் எதிர்க்கட்சியும் மக்களிடையே போலிப் பிரசாரம் செய்து வருகிறது என்று ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நான் அப்படி எதிர்க்கவில்லை என்றும் நாங்கள் மூவரும் மிகவும் ஒற்றுமையாக செயற்படுகிறோம் என்றும் இந்த நாட்டு மக்களுக்குத் தெரியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதி ஊடக பிரிவு அதிகாரிகளுடன் கலந்தாலோசனை ஒன்று நடத்தியபோதுதான் இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்;

நாங்கள் மூன்று சகோதரர்களும் மிகவும் ஒற்றுமையாக செயற்படுகிறோம்.எங்களிடைய எந்தப் பிரச்சினையும் கிடையாது. 

இந்த நிலையில்,பசில் ராஜபக்ஸ நாடாளுமன்றம் வருவதை வைத்து சிலர் போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.அவரின் வருகையை நானும் பிரதமரும் எதிர்ப்பதாக பிரசாரம் செய்கின்றனர்.இதில் எந்த உண்மையும் கிடையாது.மக்கள் உண்மையை அறிவர்.என்றார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us