Home / World News / Post:6540

காஸா மீதான கட்டுப்பாடு:தளர்த்துகிறது இஸ்ரேல்:இன்று முதல் நடைமுறை 

Fri, 25 Jun 2021 10:52:25 +0530 | News Desk
காஸா மீதான கட்டுப்பாடு:தளர்த்துகிறது இஸ்ரேல்:இன்று முதல் நடைமுறை 

இஸ்ரேலின் புதிய அரசு உதயமானதைத் தொடர்ந்து இஸ்ரேல் இதுவரை விதித்திருந்த காஸா மீதான சில தடைகளை நீக்குகிறது.

அதில் முக்கியமாக மீன் பிடி மற்றும் தொழில்சாலைகளுக்கான மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்தல் அடங்குகிறது.

காஸாவில் இருந்து மீன் பிடிக்கும் கடல் எல்லை இன்று முதல் 6 கடல் மைலில் இருந்து 9 கடல் மைல் வரை விஸ்தரிக்கப்படுகிறது.

அதேபோல்,தொழில்சாலைகளுக்கான மூலப்பொருட்களை வெளியிடங்களில் இருந்து கரீம் சலோம் என்ற இஸ்ரேல்-காஸா எல்லையின் ஊடாக காஸாவுக்குள் எடுத்துச் செல்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக தேவையான மூலப்பொருட்களை இஸ்ரேலில் இருந்தே கொள்வனவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்படுறது.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us