Home / Local News / Post:6534

சாராய விற்பனைத் தடை: தினமும் ரூ.60 கோடி நட்டம் 

Thu, 24 Jun 2021 20:36:29 +0530 | News Desk
சாராய விற்பனைத் தடை: தினமும் ரூ.60 கோடி நட்டம் 

தொடரும் பயணத் தடை காரணமான சாராயக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் அரசுக்கு தினமும் 60 கோடி ரூபா நாட்டம் ஏற்பட்டு வருகிறது என்று ஹலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜெ.குணசிறி கூறுகையில்;பயணத் தடை காரணமாக அணைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன.இதனால் சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது.

சிலர் வீடுகளில் சாராயத்தை காய்ச்சு பருகும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.உள்ளூர் மதுபான வகைகள் கறுப்புச் சந்தையில் விற்கப்படுகின்றமையையும் அறிவோம்.

1600 ரூபாவாக விற்கப்படும் 750 மில்லி லீற்றர் அதி விசேஷ மதுபானம் கருப்புச் சந்தையில் 5 ஆயிரம் ரூபா வரை விற்கப்படுகிறது.அதன் கறுப்புச் சந்தை விலை 2500 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது.

இந்தப் பயணத் தடை காரணமாக அரசுக்கு தினமும் 60 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டு வருகிறது.-என்றார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us