Home / Lead News / Post:6533

காஸாமீது மீண்டும் தாக்குதல்: புதிய அரசு நேற்று அட்டூழியம் 

Sat, 19 Jun 2021 09:56:47 +0530 | News Desk
காஸாமீது மீண்டும் தாக்குதல்: புதிய அரசு நேற்று அட்டூழியம் 

பெஞ்சமின் நெதன்யாஹு பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்துள்ள இஸ்ரேலிய புதிய அரசு நேற்று காஸாமீது விமானத் தாக்குதல்களை நடத்தியது.

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை நோக்கி வெடிகுண்டு பலூன்களை அனுப்பினார் என்று குற்றஞ்சாட்டியே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

காஸா நகர்,கான் யூனுஸ் மற்றும் ஹமாஸின் ரொக்கட் தளம் ஆகியவற்றின்மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று ஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த வெடிகுண்டு பலூன்கள் காரணமாக தெற்கு இஸ்ரேலில் எட்டு குண்டுகள் வெடித்தன என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us