Home / Gossips / Post:6532

எம்பிக்களுக்கான வாகன இறக்குமதி: நிறுத்தி வைக்கப்பட்டது இப்படித்தான் 

Sun, 30 May 2021 08:05:12 +0530 | News Desk
எம்பிக்களுக்கான வாகன இறக்குமதி: நிறுத்தி வைக்கப்பட்டது இப்படித்தான் 

கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் பின்வரிசை எம்பிக்களுடன் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாடல் ஒன்றை மேற்கொண்டார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ.

அப்போது அவர்களுடன் பேசப்பட்ட விடயங்களுள் எம்பிக்களுக்கான வாகன இறக்குமதி முக்கியமான விடயமாகும்.

எம்பிக்கள் அனைவருக்கும் குறிப்பாக,புதிய எம்பிக்களுக்கு வாகனங்கள் தேவைதான்.என்றாலும்,இப்போதைய நிலைமையில்,வாகனங்களை இறக்குமதி செய்வது சரி இல்லை.கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய இந்த சூழலில் வாகனங்களை இறக்குமதி செய்வது எமது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடும்.அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று அந்த எம்பிக்கள் கூறினர்.

மஹிந்தவும் அதை ஏற்றுக்கொண்டு அமைச்சரவை கூட்டத்துக்குச் சென்றார்.அங்கு இந்த விடயத்தைக் கூறினார்.

''இதை தற்போதைக்கு நிறுத்தி வைப்போம்.கொரோனா நிலைமை சரி வந்ததும் தொடங்குவோம்'' என்று மஹிந்த அமைச்சரவையில் கூறினார்.

இதை முழுமையாக ஏற்றுக்கொண்ட அமைச்சரவை உறுப்பினர்கள் இதை நிறுத்தி வைப்பதற்காக முழு அனுமதியை வழங்கினர்.

எம்பிக்களுக்கான வாகன இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணி இதுதான்.

 


Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us