Home / World News / Post:6524

ஓரிரு நாட்களில் போர் நிறுத்தம் 

Thu, 20 May 2021 10:30:04 +0530 | News Desk
ஓரிரு நாட்களில் போர் நிறுத்தம் 

ஓரிரு நாட்களில் ஹமாஸ்-இஸ்ரேலிடையே போர் நிறுத்தம் ஏற்படக்கூடும் என்று ஹமாஸ் அரசியல் பிரிவு அதிகாரி மௌஸா அபு மர்சூக் லெபனான் தொலைக்காட்சியான அல்-மயதீன் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக பல தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் ஓரிரு நாட்களில் வெற்றி பெரும் என தான் நம்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆனால்,இப்போது வரைக்கும் இரு தரப்பிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுக்கொண்டே செல்கின்றன என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தமது இலக்கை எட்டும்வரை போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்குத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us