Home / World News / Post:6522

இஸ்ரேலின் தாக்குதல் இனவாதம் கொண்டது: தென் ஆபிரிக்க ஜனாதிபதி கண்டனம் 

Thu, 20 May 2021 09:31:33 +0530 | News Desk
இஸ்ரேலின் தாக்குதல் இனவாதம் கொண்டது: தென் ஆபிரிக்க ஜனாதிபதி கண்டனம் 

கஸாமீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா வன்மையாகக் கண்டித்துள்ளார்.

பலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அணைத்து உரிமைகளும் உள்ளன.அதை இஸ்ரேலால் தடுக்க முடியாது என்று அவர் பிரான்ஸ் நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த மக்களின் எல்லா வகையான உரிமைகளையும் மறுத்துவிட்டு அவர்கள்மீது குண்டு போட்டு அவர்களை அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.இதை இஸ்ரேல் உடன் நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us