Home / World News / Post:6515

மேற்கு வங்கத்தில் 42 முஸ்லிம் MLA க்கள் தெரிவு 

Tue, 04 May 2021 19:06:28 +0530 | News Desk
மேற்கு வங்கத்தில் 42 முஸ்லிம் MLA க்கள் தெரிவு 

292 ஆசனங்களைக் கொண்ட மேற்கு வங்க சட்ட சபைக்கு 42 பேர் முஸ்லிம் MLAக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முதலவர் மம்தா பேனர்ஜி 42 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கி இருந்தார்.அவர்களுள் ஒருவரைத் தவிர 41 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.மேலும் ஒரு முஸ்லீம் வேட்பாளர் வேறு ஒரு கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டார்.

மம்தாவின் கட்சியில் வெற்றி பெற்ற 41 முஸ்லிம்களுல் ஹுமாயுன் கபீர் என்ற பொலிஸ் ஆணையாளர் ஒருவரும் அடங்குகிறார். 

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் மூவரைக் கைது செய்து பரபரப்பாகப் பேசப்பட்டவர் அவர்.இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே பதவியை இராஜினாமா செய்தார்.வெற்றியும் பெற்றார்.

அதேவேளை பாஜகவில் 77 பேர் தெரிவானபோதும் அதில் ஒருவரும் முஸ்லிம்கள் இல்லை.

மேலும்,அசாருதீன் உவைஸ் 5 வேட்பாளர்களை களமிறக்கி இருந்தார்.அனைவரும் தோல்வியடைந்துவிட்டனர்.

இந்தத் தேர்தலில் 42 முஸ்லிம்கள் வெற்றிபெற்றபோதிலும் 2016 மற்றும் 2011 தேர்தலை ஒப்பிடும்போது இது வீழ்ச்சியாகும்.அந்தத் தேர்தல்களில் முறையே 56 மற்றும் 59 முஸ்லிம்கள் தெரிவாகி இருந்தனர்.

2011 இல் 59
2016  இல் 56
2021 இல் 42


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us