Home / Local News / Post:6514

சும்மா கிடக்கும் தாமரைத் தடாகம்: கொரோனா சிகிச்சை நிலையமாகப் பயன்படுத்தவும்

Tue, 04 May 2021 13:46:05 +0530 | News Desk
சும்மா கிடக்கும் தாமரைத் தடாகம்: கொரோனா சிகிச்சை நிலையமாகப் பயன்படுத்தவும்

கொழுப்பு தாமரைத் தடாகம் சும்மாவே கிடக்கிறது என்றும் அங்கு கட்டில்களை நிரப்பி கொரோனா சிகிச்சை நிலையமாகப் பயன்படுத்துமாறு ராஜித சேனாரத்ன  இன்று நாடாளுமன்றில் கூறினார்.

கொரோனா தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சபையில் சமர்ப்பித்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்;

கொரோனா தொடர்பில் ஆய்வுகளை நடத்திய இலங்கை வைத்திய நிபுணர்கள் வேறுபட்ட கொரோனா வைரஸ்கள் இலங்கையை பாதிக்கக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளது என்று ஏப்ரல் 8 ஆம் திகதி கூறி இருந்தனர்.

அரசு அதை புறக்கணித்து செயற்பட்டதால் இன்று கொரோனா பரவல் அதிகரித்து மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஒக்ஸிசன் தேவைப்படும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

மொத்த சனத்தொகையில் 70 வீதத்துக்கேனும் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும்.அது முடியாமல் போயுள்ளது.திறமையான வைத்திய நிபுணர்கள் அரசியல் அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.

கொழுப்பு தாமரைத் தடாகம் சும்மாவே கிடக்கிறது.அங்கு கட்டில்களை நிரப்பி கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுங்கள்.இரண்டாம் நிலை வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை வழங்கினால் அங்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.என்றார். 

 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us