Home / Lead News / Post:6485

கைகொடுத்தது பாகிஸ்தான்... காலை வாரியது இந்தியா... இலங்கையின் உண்மையான நண்பன் யார்?

Wed, 24 Mar 2021 09:51:14 +0530 | News Desk
கைகொடுத்தது பாகிஸ்தான்... காலை வாரியது இந்தியா... இலங்கையின் உண்மையான நண்பன் யார்?

இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணைக்கு எதிராக நேற்று வாக்களித்ததன் மூலம் இலங்கையின் உண்மையான நண்பன் தான்தான் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது பாகிஸ்தான்.

ஆனால்,இந்தியாவோ சந்தர்ப்பதை பார்த்து இலங்கையின் காலை வாரியுள்ளது.தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில் ஆசனங்களை பெற வேண்டும் என்ற நோக்கில் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தது இந்தியா.

தமிழ் நாட்டு தமிழர்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக இப்படியொரு நாடகத்தை நடித்துள்ளது இந்தியா.

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே தாம் இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்காது நடுநிலை வகுத்துள்ளதாக இப்போது காட்டிக்கொள்கிறது.

ஆனால்,பாகிஸ்தானோ நேரடியாகவே தனது ஆதரவை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்தியாவின் பின்னால் ஓடுகின்ற-இலங்கையின் வளங்களை இந்தியாவுக்கு வழங்கத் துடிக்கின்ற இலங்கை அரசுக்கு இதுவொரு நல்ல பாடமாகும்.


   


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us