Home / Local News / Post:6483

17 முஸ்லிம் எம்பிக்களுக்காகவே ரணில் என்னை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கினார்.

Mon, 15 Mar 2021 07:42:08 +0530 | News Desk
17 முஸ்லிம் எம்பிக்களுக்காகவே ரணில் என்னை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கினார்.

தான் வஹாபிஸ தீவிரவாதம் பற்றிக் கூறியதால் அப்போது இருந்த 17 முஸ்லிம் எம்பிக்கள் என்னை எதிர்த்தனர்.அவர்களுக்காக-முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக ரணில் என்னை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கினார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று மீரிகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்,

முஸ்லிம் சிறுவர்களுக்கு தீவிரவாதம் போதிக்கப்படுகிறது.இது நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.நாடு பயங்கரவாத அச்சுருத்தலை எதிர்நோக்கும்.

70 களில் அப்போதைய கல்வி அமைச்சர் பதியுதீன் முஹம்மட் முஸ்லிம்களுக்கென்று தனியான பாடசாலைகளை அமைத்தார்.அதுவரை தமிழ்,முஸ்லீம்,சிங்களம் மாணவர்கள் ஒன்றாகவே கல்வி கற்றனர்.பதியுதீன் முஹம்மட் தனியான பாடசாலைகளை அமைத்ததால் முஸ்லீம் மாணவர்கள் பிரிந்து சென்று முஸ்லீம் பாடசாலைகளில் கல்வி கற்கத் தொடங்கினர்.

2019 மார்ச் அளவில் ஸஹ்ரான் 6 பாடசாலைகளை நிறுவினார்.அதில் மாணவர்களுக்கு பயங்கரவாதம் போதிக்கப்பட்டது.

2016 ஒக்டொபர் 18 இல் வஹாபிஸ பயங்கரவாதம் தொடர்பில் நான் நாடாளுமன்றில் குரல் எழுப்பினேன்.அன்றில் இருந்து நான் பயங்கரவாதியாக பார்க்கப்பட்டேன்.

எனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு 2 வருடங்களும் 5 மாதங்களும் காத்திருக்க வேண்டியேற்பட்டது.ஈஸ்டர் தாக்குதல் எனது குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபித்துள்ளது.இப்படியொரு தாக்குதல் நடக்கும் என்று நான் அப்போதே கூறி இருந்தேன்.

வஹாபிஸ பயங்கரவாதம் ஒன்று இல்லையென்று அன்று நாடாளுமன்றில் குரல் எழுப்பிய ஹிஸ்புல்லாஹ்,முஜிபுர் ரஹ்மான்,றிசாத் பதியுதீன் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

நான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தமைக்காக 17 முஸ்லிம் எம்பிக்கள் என்னை எதிர்த்தனர்.இவர்களுக்காகவே ரணில் என்னை அமைச்சில் இருந்து நீக்கினார்.

ரணில் நாட்டை விடவும் முஸ்லிம் வாக்குகளையே மதித்தார்.இதனால்தான் என்னை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கினார்.என்றார்.


Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us