Home / Local News / Post:6482

அசாத் சாலி இன்று கைதாகலாம் 

Mon, 15 Mar 2021 07:13:46 +0530 | News Desk
அசாத் சாலி இன்று கைதாகலாம் 

நாட்டின் சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்று கூறி அசாத் சாலி இன்று சிஐடியினரால் கைது செய்யப்படலாம் என்று பொலிஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

அவரது கருத்துத் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிஐடியால் 5 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.அவர்மீதான விசாரணை இடம்பெறுகிறது.

அவர் இன்று கைது செய்யப்படலாம் எனத் தெரிய வருகிறது.தான் கைதுக்கு அஞ்சவில்லை என்றும் நாட்டின் சட்டத்துக்கு எதிராக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us