எங்கள் சட்டம் எங்களுக்கு.உங்கள் சட்டம் உங்களுக்கு என்று தான் கூறிய கூற்றில் எதுவித தவறும் இல்லை என்று அசாத் சாலி தெரிவித்துள்ளார்.அவர் ஊடகங்களுக்கு மேலும் கூறுகையில்,
நான் இந்த நாட்டின் சட்டத்தை அவமதிக்கவில்லை.முஸ்லிம்களாகிய நாங்கள் குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையிலான எமது சட்டத்தை மதிக்கிறோம்.
அதுபோல்,சிங்களவர்களுக்கும் தனியான சட்டம் உண்டு.அந்தச் சட்டம் அவர்களுக்கு.எங்கள் சட்டம் எங்களுக்கு.இவ்வாறு நான் கூறியதில் என்ன பிழை இருக்கிறது.
இதுதானே உண்மை.சிங்களவர்கள் அவர்களின் சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள்.முஸ்லிம்கள் முஸ்லிம்களின் சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள்.இதைத்தான் நான் சொன்னேன்.என்றார்.