இஸ்லாத்துடன் தொடர்புபட்ட பல விடயங்களில் கைவைப்பதற்குத் தீர்மானித்துள்ள அரசு அவற்றுள் ஒன்றாக மத்ரஸாக்கள் பலவற்றின்மீதும் கை வைக்கவுள்ளது.
பதிவு செய்யப்படாத நிலையில் 1986 மதரஸாக்கள் உள்ளன என்றும் அவை தடை செய்யப்படும் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
புர்காவைத் தடை செய்யும் அமைச்சரவைப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ள சரத் வீரசேகர அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கை மத்ரஸாக்களுக்கு எதிரானதாகவே இருக்கும் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.