Home / Lead News / Post:6472

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பஸில்... கோட்டாவுக்கு வெட்டு.. இப்போதே நகர்த்தப்படும் காய்

Fri, 12 Mar 2021 13:03:04 +0530 | News Desk
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பஸில்... கோட்டாவுக்கு வெட்டு.. இப்போதே நகர்த்தப்படும் காய்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்சவை நிறுத்துவதற்கான காய் நகர்த்தல் இப்போதே மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. 

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவப் பதவியை மஹிந்தவிடம் இருந்து பறித்து அதை ஜனாதிபதி கோட்டாபாயவுக்கு வழங்கி அவரையே மீண்டும் ஜனாதிபதியாக்கும் முயற்சியில் விமல் வீரவன்ச குழுவினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில்தான் பசில் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான  காய் நகர்த்தல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுஜன பெரமுனவில் இருக்கும் பசில் ஆதரவு எம்பிக்கள் மற்றும் கீழ் மட்ட உறுப்பினர்கள் இப்போதே ஜனாதிபதி வேட்பாளர் கோசத்தை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

மீண்டும் கோட்டாவை ஜனாதிபதியாக்கும் நடவடிக்கையில் விமல் வீரவன்ச குழுவினர் ஈடுபடத் தொடங்கியதைத் தொடர்ந்தே அதை முறியடித்து பசிலை ஜனாதிபதியாக்கும் நடவடிக்கையில் அவரது ஆதரவாளர்கள் களமிறங்கியுள்ளனர்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us