சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பி ரஞ்ஜன் ராமநாயக்க நாடாளுமன்றம் வராதிருப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மூன்று மாத விடுமுறையைக் கோருவதற்குத் திட்டமிட்டுள்ளது.
நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியில்ல இந்த விடுமுறைக்கான அனுமதியை சபாநாயகரிடம் கோரவுள்ளார்.