8 மாதக் குழந்தையைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தண்டனைச் சட்டத்தின் 300,308 மற்றும் 308ஏ பிரிவின்கீழ் கொலை முயற்சி மற்றும் சிறுவர் கொடுமை அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
யாழ்.மணியந்தோட்டத்தைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று நல்லூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.