கொரோனா ஜனாஸாக்களை இரணைதீவில் நல்லடக்கம் செய்யும் அரசின் தீர்மானத்துக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் தற்போது பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ள ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் மேலும் தாமதம் ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் அடுத்த இடத்தைத் தெரிவு செய்யும்வரை இருக்கின்ற ஜனாஸாக்களை எரித்துவிடுவார்களோ என்ற அச்சமும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த ஜனாஸாக்களை மேலும் தாமதப்படுத்தாது முஸ்லிம்களின் இடங்களில் அடக்கம் செய்வதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.