Home / Gossips / Post:6460

இம்ரான் கானுக்கு ஏன் கோட்டாபாய சாப்பாடு போடவில்லை தெரியுமா?

Mon, 01 Mar 2021 11:38:04 +0530 | News Desk
இம்ரான் கானுக்கு ஏன் கோட்டாபாய சாப்பாடு போடவில்லை தெரியுமா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வந்தபோது அவருக்கு பிரதமர் மஹிந்த மற்றும் நாமல் ஆகியோர் விருந்துபசாரம் நடத்தினர்.

ஆனால்,ஜனாதிபதி கோட்டாபய சாப்பாடு போடவில்லை.இது இப்போது அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்  இலங்கை வந்தபோது அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனியாகவும்,பிரதமர் ரணில் தனியாகவும் விருந்து வைத்தனர்.

அதேபோல்,சந்திரிகா காலத்தில் முஸர்ரப் இலங்கை வந்தபோதும் ஜனாதிபதி தனியாகவும் பிரதமர் தனியாகவும் விருந்துவைத்து கௌரவப்படுத்தினர்.

ஆனால்,இம்ரான்கானுக்கு ஜனாதிபதி சாப்பாடு போடவில்லை.இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி இப்படி நடந்துகொண்டுள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us