Home / Gossips / Post:6459

ரணிலின் புரியாணி பார்ட்டிக்குப் போனாரா சஜித்?

Mon, 01 Mar 2021 11:08:54 +0530 | News Desk
ரணிலின் புரியாணி பார்ட்டிக்குப் போனாரா சஜித்?

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் அக்கட்சி உறுப்பினர்கள் கடந்த வாரம் எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்தார் சஜித் பிரேமதாசா.''நீங்கள் ரணிலின் புராணி பார்டிக்குப் போகல்லையா'' என்று கேட்டார் ஏ.சி.அளவத்துக்கொட.

அதற்கு பதிலளித்த சஜித் ''அவருடன் சாப்பாட்டுக்குப் போகவேண்டிய தேவை எனக்கில்லை.மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை போடுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய வேலைகள் அதிகம் இருக்கு''என்றார்.

அப்போது குறுக்கிட்ட நலின் பண்டார ''நீங்கள் ரணிலுடன் பேசுவதுபோல் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் உலாவுகிறதே'' என்று கேட்டார்.

அது உண்மைதானா என்று இன்னொரு தடவை உத்துப்பாருங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார் சஜித். 


Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us