Home / Local News / Post:6455

மாகாண சபைத் தேர்தல் எப்போது? ஜனாதிபதி தலைமையில் நாளை கலந்துரையாடல்

Mon, 01 Mar 2021 07:04:26 +0530 | News Desk
மாகாண சபைத் தேர்தல் எப்போது? ஜனாதிபதி தலைமையில் நாளை கலந்துரையாடல்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபாய தலைமையில் நாளை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேர்தலை இந்த மாதம் நடுப்பகுதியில் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ஏற்கனவே  தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்தார்.

அவ்வாறு தேர்தலை நடத்துவதற்கு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யவேண்டியுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கூறியிருந்தது.

இதற்காக நாடாளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டி வரும் என்று ஜனாதிபதி கூறி இருந்தார்.

இந்த நிலையில்,இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலை நாளை நடத்துகிறார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us