அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர,வாசுதேவ நாணயக்கார மற்றும் ரவூப் ஹக்கீம் எம்பி ஆகியோர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நாடாளுமன்ற எம்பிக்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்கள் ஆகியோர்க்கு PCR பரிசோதனை செய்யப்படவுள்ளது.
13 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் இந்த சோதனை மேற்கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தங்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்த விரும்பும் எம்பிக்கள் இந்த தினங்களில் நாடாளுமன்றத்துக்கு வரமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.